×

மதங்களை கடந்த மனிதம் - ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி !

 

மதங்களைக் கடந்து மனிதம் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரள ஸ்டோரி' கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. நாளை வெளியாக உள்ள இந்த படம்‌ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதற்கிடையே கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள காயங்குளம் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. முஸ்லீம் ஜமாத் கமிட்டி சர்ச் கமிட்டி நடத்தி வைத்தது. மணமகளின் தந்தை திடீரென இறந்தவிட்டதால்  திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு மசூதியை திருமண மண்டபமாக மாற்றிய முஸ்லீம் ஜமாத் கமிட்டி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தது. 

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்‌‌. அந்த பதிவில் மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், குணப்படுத்தாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தி கேரள ஸ்டோரி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.