×

சலார் பட மேக்கிங் வீடியோ வெளியானது

 

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

<a href=https://youtube.com/embed/OK7Qj3PDXWo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/OK7Qj3PDXWo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், சலார் திரைப்படத்தின் மேக்கிங் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.