அர்ஜுன் தாஸ் நடித்த Once More படத்தின் எதிரா? புதிரா? பாடல் ரிலீஸ்...!

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள Once More படத்தின் `எதிரா? புதிரா?' பாடல் வெளியானது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.
படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா? புதிரா? பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ளார்.