விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள் வைரல்
Oct 31, 2023, 14:16 IST

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.