×

லியோ வெற்றி விழா ஏற்பாடுகள் தீவிரம்... புஸ்ஸி ஆனந்த் ஆய்வு...

 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

முதல் நாளிலேயே 400 கோடி ரூபாய் வசூலித்த லியோ திரைப்படம் தற்போது, 7 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் ஈட்டியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.