×

பார்கிங் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது

 

ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ’பார்கிங்’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எல்.ஜி.எம். படத்தை தொடர்ந்து, பார்க்கிங் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சாம் சிஎஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில், பார்கிங் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியீட்டு தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய தேதி விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.