'ஹே ராம்' படத்துக்கு வரவேற்பு பத்தல பத்தல, அதனால தான் 'விருமாண்டி'... நடிகர் கமல்ஹாசன்!
லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. படம் ஓடிடி-யில் வெளியான பின்னும் சில திரையரங்குகளில் படம் ஓடி வருவது சாதனை தான்.
இந்நிலையில் விக்ரம் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களுடன் கமல் சந்திப்பு நடத்திய சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் குறித்தும் அரசியல் குறித்தும் அனல் பறக்க பேசியிருந்தார்.
அதில் பேசிய கமல்,
"நீங்கள் நடித்ததில் உங்களுக்கு மிக மிக கஷ்டமாக இருந்த திரைப்படம் எது? என்ற கேள்விக்கு "நாம் உடல் ரீதியாக செய்வதை கஷ்டம் என்று தான் சொல்லுவோம். உழைப்பில்லாமல் ஊதியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அத விட்டுட்டு எனக்கு வயிறு வலிக்குதும் இடுப்பு வலிக்குதுனு சொல்லிட்டுருக்க முடியாது.
ரசிகர்கள் பார்க்கும் போது என் கால் உடைஞ்சிருந்தாலும் நான் நல்ல டான்ஸ் ஆடுறேனானு தான் பாப்பாங்க. அது தான் அவங்க வேல. வேலை கோவில் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் மாதிரி என் புண்ணைக் காட்டி காசு வாங்க மாட்டேன்" என்று பேசியுள்ளார்.
"விருமாண்டி திரைப்படம் தான் என்னை மீண்டும் இயக்குனர் ஆக்கியது. ஏனெனில் ஹேராம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பத்தல. பத்தல பத்தல தான்.
'ஹே ராம்' படத்தை அடுத்து எடுத்து மணிரத்தனத்தை வைத்து நான் மூ என்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நான், மணிரத்தினம் மற்றும் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ ராவ் மூவரும் இணைந்து இந்த படத்தை இயக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் மணிரத்னம் நான் ஏற்கனவே ஆயுத எழுத்து என்று ஒரு கதையை தயார் செய்து விட்டேன் என்றார்.
அதன் பிறகு இரண்டு இயக்குனர்களை வைத்து எடுக்கலாம் என்று விருமாண்டி படத்தை எடுத்தேன். அதில் ரோசமோன் என்ற இன்ஸபிரேஷன் இருந்தது.
படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம் லைவ் சவுண்ட். மேலும் மேலும் அங்கு இருந்த ரயில்வே ட்ராக் நாங்கள் போட்டது தான். அபிராமி வேற்று மொழி பேசக் கூடியவர். ஆனால் தெற்கத்திய பாசையை மிக நுணுக்கமாக கற்றுக் கொண்டு அருமையாக பேசினார்.
என்னுடைய பல படங்களுக்கும் அவரை டப்பிங் பேச அழைத்துள்ளேன். விஸ்வரூபம் படத்திற்கும் அவர் தான் டப்பிங் பேசினார். அமெரிக்க பாசையும் பேச வேண்டும் என்பதால் அவர் அதை சிறப்பாக செய்வார்." என்று பேசினார்.