×

'இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு...!

 

நடிகர் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் 'இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது. 

முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் மீண்டும் விஷ்ணு விஷால் உடன் இணையும் திரைப்படம் 'இரண்டு வானம்' . இந்த படத்தில் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.   இந்த படம் மூலம் விஷ்ணு விஷால்- ராம் குமார் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினனன் தாமஸ் இசையமைக்கிறார்.