அருண் விஜய்யின் 'ரெட்ட தல' ஷூட்டிங் நிறைவு..
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் 36வது படமான 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் வார்ப் (WRAP) வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அருண் விஜய் தனது ஆரம்பக் கால சினிமா வாழ்க்கையில் இலகுவான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். பின்னர் படிப்படியாக ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருக்கியவர். சினிமாவில் நீண்ட வருட போராட்டத்துக்கு பிறகு அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது எனலாம். தற்போது தனது கட்டு மஸ்தான உடலமைப்பால் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
அவர் யானை, தடம், மிஷன் சாப்டர்- 1 என வித்தியாசமான படங்களில் நாயகனாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க இருந்து நிலையில் அவர் விலகியதால் அருண் விஜய் அந்த படத்தை நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரியாணி விருந்து அளித்த அருண் விஜய்: இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் படக்குழுவினருக்கு அருண் விஜய் பிரியாணி விருந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். ஆண்டனி படத்தை தொகுக்கயுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வணங்கான் படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரெட்ட தல படத்தின் அடுத்த அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் எனலாம்.