பூஜையுடன் தொடங்கிய ‘D 54' படப்பிடிப்பு.. ‘போர் தொழில்’ இயக்குநருடன் கைகோர்த்த தனுஷ்..!!
'போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘D 54' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘குபேரா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ், தனது 54வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘D54’ என அழைக்கப்படும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பூஜை இன்று (ஜூலை 10) நடைபெற்றது.
படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டு எளிமையாக முறையில் பூஜை நடைபெற்றது. படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கும் நிலையில், கதாநாயகியாக ‘பிரேமலு’ பட நாயகி மமிதா பைஜூ நடிக்கிறார். அத்துடன் மலையாள நடிகர்கள் ஜெயராம், சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் கிரைம் , திரில்லர் கலந்த எமோஷனல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.