ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஹிப் ஹாப் ஆதி, இயக்குநர் சுந்தர் சி இணைந்து தயாரிக்கும் மீசையமுறுக்கு படத்தின் இரண்டாம் பாகம் என தகவல் வெளியாகி உள்ளது!
இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான திரைப்படம் ‘மீசைய முறுக்கு’. ஹிப் ஹாப் ஆதியின் இசைப் பயணத்தை வைத்து எடுக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நட்பே துணை, சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன், கடைசி உலக போர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாக உள்ளார். இதே சமயம் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி மற்றும் இயக்குநர் சுந்தர் சி இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இதனை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்து இசையமைக்க உள்ளார். இது மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.