பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Feb 23, 2025, 19:34 IST
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அடுத்து 2 வருடமாக அவர் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வந்தார். இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.