×

சிக்ஸ் பேக் விவகாரம்... நடிகர் விஷால் விளக்கம்...!

 

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் சிக்ஸ் பேக் குறித்து பேசியது சர்ச்சையானது.


அந்த நிகழ்வில் சிவக்குமார், “என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?" எனப் பெருமையாகப் பேசினார்.
இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.