பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும் நட்சத்திர ஜோடி..
பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக ஒரு திரைப்படத்தில் வில்லன் அல்லது வில்லி என்று மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி, சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர், வில்லன், வில்லி கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் 'ஸ்பிரிட்'. இந்த படத்தை ’அர்ஜுன் ரெட்டி’ ‘அனிமல்’ படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இது பிரபாஸின் 25-வது படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இப்படத்தில் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஜோடி வில்லன்களாக நடிப்பார்கள் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் உள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் உருவாக இருப்பதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும், 2026 ஆம் ஆண்டில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.