×

முதல் பாடல் படப்பிடிப்பு நிறைவு செய்த விடாமுயற்சி படக்குழு

 

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர்.

இதனிடையே படக்குழு 5 நாட்கள் இடைவெளியில், சென்னை திரும்பியது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.