திகிலூட்டும் வகையில் நடந்த இறைவன் பட வெளியீடு நிகழ்ச்சி....
Sep 24, 2023, 19:01 IST
இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரத்தமும், சதையுமாய் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை கண்டு பத்திரிகையாளர்கள் வியப்படைந்தனர். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.