×

'அலங்கு' படத்தின் டிரெய்லர் வெளியானது

 

அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படம் வரும் 27-ந் தேதி வெளியாக உள்ளது.`உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' போன்ற திரைப்படங்களின் இயக்குனரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு'. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா பிரசாரங்களை மேற்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் 'அலங்கு' திரைப்படமானது, தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.