×

அர்ஜுன் நடித்த 'விருந்து' படத்தின் டிரெய்லர் வெளியானது

 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன்,ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ஹீரோவாக மாஸ் காட்டி வந்த அர்ஜுன், மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த மங்காத்தா,இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

<a href=https://youtube.com/embed/phyjHVzvGZ0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/phyjHVzvGZ0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள விருந்து என்ற திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தாமர கண்ணன் இயக்கியுள்ளார். நெய்யார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மலையாளத்தில் இப்படத்திற்கு விருன்னு என்று பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் தாமர கண்ணன் வரல் , உடும்பு , விதி: தி வெர்டிக்ட், பட்டாபிராமன் மற்றும் பல மலையாளப் படங்களை இயக்கியுள்ளார் .அர்ஜுன் நடித்த 'விருந்து' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.