×

ப்ரோமான்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது 

 

அர்ஜுன் அசோகன் நடித்த ப்ரோமான்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது 


மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromancc} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

<a href=https://youtube.com/embed/JOPuTZfDp0M?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JOPuTZfDp0M/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. தொலைந்துப் போன அண்ணனை தேடும் பணிகளில் ஈடுப்படும் போது அவர்கள் சந்திக்கும் எதிர்ப்பாராத பிரச்சனைகள் போன்ற காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.