×

சாந்தனு, ஹன்சிகா நடிக்கும் மை3 வெப் தொடரின் முன்னோட்டம் ரிலீஸ்

 

சாந்தனு, ஹன்சிகா நடிக்கும் மை3 வெப் தொடரின் முன்னோட்டம் வெளியானது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிளை’ படமும் ரசிகர்களிடம் சேரவில்லை. இதையடுத்து, அவர் வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதற்கு மை3 என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஹன்சிகா மோத்வானி, சாந்தனு, ஜனனி, முகேன் ராவ், உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமேன்டிக் காமெடி கதைக் களத்தில் இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில், மை3 வெப் தொடரின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

<a href=https://youtube.com/embed/2MErcOfA3D8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/2MErcOfA3D8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

வரும் செப்டம்பர் 15-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மை3 தொடர் வெளியாகிறது.