நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெற்ற பெண்கள் அணி.. வழக்கம் போல் சொதப்பிய ஆண்கள்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று 19வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது
இந்த வீடியோவில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் வைக்கப்படும் நிலையில், நூலை பேலன்ஸ் செய்து, நூல் மேல் உள்ள பந்தை அதற்கு நேராக உள்ள பெட்டியில் போட வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த டீமுக்கு புள்ளிகள் கிடைக்கும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார்.
நூல் தவறி வந்து கீழே விழுந்தால் புள்ளிகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி நூல் விடும் போட்டியை விளையாட தொடங்குகின்றனர்.
தொடர்ந்து டாஸ்க்குகளில் பெண்கள் அணி வெற்றி பெற்றும், ஆண்கள் அணி சொதப்பியும் வரும் நிலையில் வைல்ட் கார்டில் வரும் ஆண் போட்டியாளர்கள் தான் இனி அந்த அணியை காப்பாற்ற முடியும் போல் தெரிகிறது என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.