×

 தனுஷ் பாடிய ''மேகம் கருக்காதா பெண்ணே''... 'திருச்சிற்றம்பலம்' செகண்ட் சிங்கிள் வெளியீடு !

 
 தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. 

தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும்,  அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே அவரது இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

பாடலை போன்று இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்களும் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

<a href=https://youtube.com/embed/zYc83YbeU-U?autoplay=1><img src=https://img.youtube.com/vi/zYc83YbeU-U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">