×

"இதுவரை கமல் சார் நடித்ததில் இதுதான் பெஸ்ட்"… நடிகர் பார்த்திபன் புகழாரம்!

கமல்ஹாசன் நடித்ததிலே இதுவரை இதுதான் மிகச்சிறந்த நடிப்பு இதுதான் என்று உத்தமவில்லன் படத்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் பாராட்டி பேசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் உத்தம வில்லன். இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்தார். இப்படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர், ஜெய்ராம், நாசர், ஊர்வசி, பூஜா குமாரி, ஆண்ட்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி
 

கமல்ஹாசன் நடித்ததிலே இதுவரை இதுதான் மிகச்சிறந்த நடிப்பு இதுதான் என்று உத்தமவில்லன் படத்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் உத்தம வில்லன். இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்தார்.

இப்படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர், ஜெய்ராம், நாசர், ஊர்வசி, பூஜா குமாரி, ஆண்ட்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பொதுவாக பல கமல் படங்கள் சாமானிய மக்களுக்கு புரிவதில்லை. இந்தப் படமும் அப்படி அமைந்துவிட்டது.

தற்போது நடிகர் பார்த்திபன் உத்தமவில்லன் படத்தின் ஒரு காட்சியைப் பகிர்ந்து  “கமல் சார் சிறந்த நடிகரே ஆனாலும் அவரின் சிறந்த நடிப்பு இது. Best இதுவரை வந்ததில்…” என்று தெரிவித்துள்ளார்.