×

‘இதுதான் இந்தியன் ஆர்மியோட முகம்’ : அமரன்  ட்ரெய்லரில் மிரட்டும் சிவகார்த்திகேயன்

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அந்தந்த மொழியின் முன்னணி நடிகர்களால் எக்ஸ் பக்கம் வாயிலாக வெளியிடப்பட்டது.  <a href=https://youtube.com/embed/hylIXfZeB4c?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/hylIXfZeB4c/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

முகுந்த் வரதராஜனின் குழந்தை பருவம் தொடங்கி, கல்லூரியில் அவரது காதல் வாழ்க்கையில் தொடர்ந்து எப்படி ஆர்மியில் சேர்ந்து அங்கு எவ்வாறு பணியாற்றினார் என்பதை படத்தில் விரிவாக சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. இது தொடர்பான அனைத்து காட்சிகளும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. ட்ரைலரின் இறுதியாக, “இதுதான் இந்தியன் ஆர்மியோட முகம்” என்று மிரட்டும் தொனியில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.