×

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் -விரைவில் விமர்சனம் வெளியாகும் 

 

தமிழ் சினிமாவில் இப்போது ஒவ்வொரு வாரமும் பல புது படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போடுகின்றன .சென்ற வாரம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின .அதில் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ .மற்றும் 3 bhk ,பீனிக்ஸ் போன்ற படங்கள் வசூலில் முன்னணி பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன .அதில் விஜய் சேதுபதி மகன் நடித்த படமும் இடம் பெற்றது .
அந்த வகையில் நேற்று (10.07.2025) சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "பீரிடம்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி  உள்ளது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது .
ஃப்ரீடம் வெறும் படம் மட்டுமல்ல, இது இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தை மிகவும் ஆழமாகவும், எமோஷனலாகவும் திரையில் காட்டி உள்ளனர். தன் கேரியரில் மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் சசிகுமார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பாராட்டுக்குரியது. முதல் 10 நிமிடத்திற்கு பின் படம் வேகமெடுக்கிறது. எந்த இடத்திலும் டல் அடிக்க வில்லை. குறிப்பாக 2ம் பாதியில் கடைசி 35 நிமிடம் வேறலெவலில் உள்ளது. இது உண்மை சம்பவம், என்பதை கடைசியில் காட்டும்போது உறைந்துபோனேன். உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என ஒரு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று  (11.07.2025) "சூப்பர் மேன், ஓஹோ எந்தன் பேபி, தேசிங்குராஜா 2, மாலிக், மாயக்கூத்து, ஓ பாமா அய்யோ ராமா, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் மற்றும் சூத்ரவாக்யம்" ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.