×

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கும் படங்களின் பட்டியல். 

 

பொதுவாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையானால் போதும் நிறைய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கொண்டாட வைக்கிறது .இந்த வாரம் விஜய் சேதுபதி படம் முதல் வடிவேலு படம் வரை ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது 
ஜூலை 25ந் தேதி தமிழ்நாட்டில் என்னென்ன படங்கள் தியேட்டரில்  ரிலீஸ் ஆகின்றன என்பதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, தீபா, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பக்கா பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான இது வருகிற ஜூலை 25ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
சுதீஸ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மாரீசன். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார்.  இப்படமும் ஜூலை 25ந் தேதி அன்று திரைக்கு வர உள்ளது.
ராதாகிருஷ்ணா ஜகர்லமுடி இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹரி ஹர வீர மல்லு.  இப்படம் ஜூலை 24ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.