×

இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்களின் பட்டியல் 

 
இப்போது சினிமா தியேட்டருக்கு இணையாக ஓடிடியிலும் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன.சில படங்கள் நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் இந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன .சில படங்கள் ரிலீஸ் ஆன சில வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன .அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் பற்றி நாம் காணலாம் 
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ‘மாரீசன்’. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.இப்படம்  நெட்பிளிக்ஸ் மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி  உள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், 'பேரன்பும் பெருங்கோபமும்'.இதில், அவருக்கு ஜோடியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சிவபிரகாஷ் இயக்கியுள்ளார். இப்படம்  ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி  உள்ளது
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'தலைவன் தலைவி'.கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம்  அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி  உள்ளது.