“என்னவொரு படம்"-நடிகை த்ரிஷா பாராட்டிய படம் இது
Jun 18, 2026, 07:00 IST
கர்ரி பார்க்கர் இயக்கத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட் நடிப்பில் மே 29ம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘அப்செஷன்’. 2023ல் ‘த சேர்’ என்ற குறும்படத்தை தனது யு டியூப் சேனலில் பதிவேற்றியிருந்தார் பார்க்கர். அந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஹாரிஸ் அந்த குறும்படத்தை சினிமாவாகத் தயாரிக்க முன்வந்தார்.
2024ம் ஆண்டு சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 10 கோடி செலவில் தயாரான படம் ‘அப்செஷன்’, தற்போது உலகம் முழுவதும் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டது. சமீபத்தில் இந்த படத்தை தனது தோழிகளுடன் பார்த்திருக்கிறார் திரிஷா. படம் குறித்து அவர் கூறும்போது, “என்னவொரு படம். படம் நம்மை பயமுறுத்தியதா அல்லது நாமே ஒருவரையொருவர் பயமுறுத்திக் கொண்டோமா என்று தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.