☰
×

ஐந்து ஆண்டுகளை கடந்து ஓடும் திரிஷா படம் -எந்த படம் தெரியுமா ?

 

சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம் ேமனன் இயக்கிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. வருடா வருடம் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படும். அவ்வாறு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் சென்னையில் இருக்கும் பிவிஆர் திரையரங்கில் தினசரி ஒரு காட்சியாக 1700 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஒரு ரீரிலீஸ் திரைப்படம் 1700 நாட்களை கடந்து ஓடுவது இதுவே முதல்முறையாகும். இப்படிப்பட்ட சாதனையை சிம்புவின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் 5 ஆண்டுகளை கடந்த தியேட்டரில் ஓடும் திரைப்படம் என்கிற சாதனையை படைக்கவுள்ளது. தற்போது சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.