×

‘தக் லைஃப்’ படத்தின் 2வது பாடல் ரிலீஸ் அப்டேட்...! 

 

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் 2வது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.   

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.  நேற்று முன் தினம் படத்தின் டிரெய்லர் படக்குழு வெளியிட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா பாடல் செம வைரலானது.  


இந்நிலையில், படத்தின் Sugar Baby என்னும் 2வது பாடல் மே 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே 24 சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.