'தக் லைஃப்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்...
Mar 21, 2025, 19:13 IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’Thug Life’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் , இந்தியன்-3 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தக் லைப் படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.