×

தியேட்டரில் தடுமாறும் தக் லைஃப் -ஓடிடியை நோக்கி ஓடுகிறது.

 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் தக் லைஃப் படம் வெளியானது .இது விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது 
இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.இப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்து கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது .மேலும் வசூலிலும் தடுமாறி வருகிறது .மணி ரத்தனத்தின் முந்தைய படங்களை போல் வசூலில் சாதனை செய்யவில்லை .மேலும் கமல் படங்களுக்கு இருக்கும் வசூல் இந்த படத்திற்கு இல்லை .

இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவானது. கடந்த ஜூன் 5ஆம் தேதி பிற மொழிகளில் வெளியான கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படவில்லை. மற்ற நான்கு மொழிகளில் வெளியான நிலையில், முதல் நாளிலிருந்து படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த  நிலையில், தக் லைப் படம் ஓ.டி.டி தளத்தில் விரைவிலேயே வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பலகோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது .அதனால் ரசிகர்கள் இப்படத்தை விரைவிலேயே ஓடிடி தளத்தில் பார்க்கலாம்