Thug Life படப்பிடிப்பில் நடிகர் சிம்பு - வெளியான புகைப்படம்
Aug 25, 2024, 18:30 IST
இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன. சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். த்ற்பொழுது மீண்டும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படத்தை சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.