×

தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

 


கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் சென்னையில் செட் அமைகப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக அயர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது படத்தில் நாசர் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் இணைந்துள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.