×

இறுதிக்கட்டத்தில் தக் லைஃப் படப்பிடிப்பு!

 


நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.தக் லைஃப் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில சண்டைக்காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. தற்போது, நடிகர் சிம்பு மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில், ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மீதமுள்ள காட்சிகளை நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குள் தக் லைஃப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் எனத் தெரிகிறது.