துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் -எந்தெந்த மொழிகளில் தயாராகிறது தெரியுமா ?
Aug 7, 2025, 06:00 IST
தமிழில் லக்கி பாஸ்கர் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் துல்கர் சல்மான் .இவர் நடிகர் மம்முட்டியின் மகன் .இவர் நடிக்கும் புதிய படத்தை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம்
இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.