×

வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கும் படம், ‘ஜாக்கி: நோ ரீடேக்ஸ் அலவ்ட்’. கரண் அரவிந்த் குமார் எழுதி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாறுபட்ட கேரக்டரில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுவரை இல்லாத வகையில் அவர் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன், காமிக் புக் பாணியிலான காட்சி அமைப்பும் இணைந்துள்ள போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார்.

இப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகிறது. விக்கி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். எஸ்.ஜெயசூர்யா எடிட்டிங் செய்ய, ஜி.எம்.சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். விக்ரம் மோர் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.