விஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
May 2, 2025, 16:18 IST
YouTube மூலம் பிரபலமான விஜே சித்து கதாநாயகனான அறிமுகம் ஆகவுள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
YouTube மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் விஜே சித்து. பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டிராகன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே சித்துவின் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது.