×

இன்று கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் பட்டியல் -மற்றும் விமர்சனம் 

 

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாக வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால்தான் அந்தவகையில் இன்று  (ஆகஸ்ட் 29ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1.பரம் சுந்தரி 2. ஓடும் குதிர சாடும் குதிர 3.வீர வணக்கம் 4.சொட்ட சொட்ட நனையுது,5. கிப்ட் 6.குற்றம் புதிது 7.கடுக்கா 8.நறுவீ 9.பேய் கதை.
இதில் நறுவீ படத்தின் கதை பற்றி பார்க்கலாம் 
குன்னூருக்கு அருகிலுள்ள நெடுங்காடு மலை கிராமத்தையொட்டிய அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால், உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், வனப்பகுதி நிலத்தில் விஜே பப்பு, பாடினி குமார் காதல் ஜோடி உள்பட 2 ஆண்கள், 3 பெண்கள் கொண்ட 5 பேர் ஆய்வு செய்கின்றனர். அப்போது அவர்களை சில அமானுஷ்ய விஷயங்கள் மிரட்டுகின்றன. ஆபத்து ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது? அதனிடம் இருந்து அவர்கள் உயிர் தப்பினார்களா என்பது மீதி கதை. டாக்டர் ஹரீஷ் அலாக், விஜே பப்பு, பாடினி குமார் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். இயக்குனர் முருகானந்தம் அப்பா வேடத்துக்கு பொருத்தமான தேர்வு.