×

2025 ம் ஆண்டில் வசூலில் சாதனை செய்த டாப் 3 படங்கள் எவை தெரியுமா ?

 

இந்த ஆண்டின் நிறைவு தருவாயில் இருக்கும் இந்த நேரத்தில் நடப்பு ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப்  3தமிழ் படங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசூல் மன்னனாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் இந்த ஆண்டு ‘கூலி’ திரைப்படம வெளியானது .‘கூலி’ படம் ரூ.518 கோடி வரை வசூல் செய்து, 2025 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இந்த ஆண்டு விஜய் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .இது அஜித் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் ரூ.248.25 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது
‘லவ் டுடே’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியால் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் வந்த படம் ட்ராகன் .சுமார் ரூ.37 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் ரூ.150 கோடி வசூலித்தது.