×

பட விழாவில் தோழிக்கு புரோபோஸ் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்... வீடியோ வைரல்...!
 

 

டூரிஸ்ட் ஃபேமிலி பட விழாவில், அதன் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனது தோழிக்கு புரோபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது   ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவையுடன் பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

<a href=https://youtube.com/embed/9sH1PoGOydc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9sH1PoGOydc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640"> இந்நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு தரப்பில் அண்மையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் தோழியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு இருந்த போது கடைசியாக தனது தோழிக்கு நன்றி கூறினார். அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா உன்னை எனக்கு 6வது படிக்கும் போது இருந்தே தெரியும். 10ஆவதில் இருந்து நாம் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளோம். இந்த இடத்தில் நின்று கொண்டு உன்னிடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.