‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் ரிலீஸ்...!
Apr 3, 2025, 19:30 IST
சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அதன்படி இருவரும் கணவன் – மனைவியாக நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.