×

 "டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம்" : இயக்குனர் சமுத்திரக்கனி 

 

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி பாராட்டியுள்ளார். 


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி   வெளியாக உள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.