`தனி வழியைக் காட்டியிருக்கிறார்கள்' - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி
கார்த்தி நடித்திருக்கும் 'மெய்யழகன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது '96' பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூர்யா - ஜோதிகாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. நாளை வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சூர்யா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
'மெய்யழகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் அதனைப் பாராட்டி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், " அன்பான டிரைலர் இது! மெய்யழகன் திரைப்படத்திற்கு கார்த்தி சாருக்கும், அரவிந்த்சாமி சாருக்கும் வாழ்த்துகள். சூர்யா சாருக்கும், பிரேம் குமார் சாருக்கும் காதலும் மரியாதையும்!" என பதிவிட்டிருந்தார் டொவினோ தாமஸ்.