×

டோவினோ தாமஸ் நடிப்பில் 3டியில் உருவாகும் ‘ஏஆர்எம்’

 

மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த ‘மின்னல் முரளி’ தமிழிலும் வெளியானது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு, பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். ‘ஏஆர்எம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் மூலம் லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜகாரியா தாமஸுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஃபேன்டஸி படமான இது 3-டியில் உருவாகியுள்ளது.

இதில் டோவினா தாமஸ், மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். அவரின் 50-வது படமான இதில், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி நாயகிகளாக நடித்துள்ளனர். பசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெரேடி, பிரமோத் ஷெட்டி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். மலையாளம், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என 6 மொழிகளில் செப்.12-ல் இந்தப் படம், வெளியாகிறது.