×

டொவினோ தாமஸ் நடித்த `நரிவேட்டை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு 

 

டொவினோ தாமஸ் நடித்த `நரிவேட்டை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது.

<a href=https://youtube.com/embed/IqZKHLfCmgk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IqZKHLfCmgk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.