×

 டோவினோ தாமஸ் நடிக்கும் 'நரி வேட்ட'படத்தின் பர்ஸ்ட் லுக்

 

டோவினோ தாமஸ் நடிக்கும் 'நரி வேட்ட'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்ட' படத்திலும் நடித்து வருகிறார்.