நயன்தாரா நடிக்கும் பான் இந்தியா படத்தின் ட்ரைலர் -எந்த படம் தெரியுமா ?
‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் டைரக்ஷனில், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசை அமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் நடித்துள்ளனர். வரும் 26ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில், யஷ் அறிமுக வீடியோ மற்றும் டீசரில் அதீத வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும் ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ என்ற முன்னோட்டம் கடந்த மாதம் வெளியானது.
தற்போது வெளியான டிரைலரில் தந்தைக்கும், மகனுக்குமான பாசப் பிணைப்புடன் காட்சி தொடங்குகிறது. பிறகு கியாரா அத்வானி தனது தாய் என்றும், தற்போது தாய், தந்தைக்கு இடையே கடுமையான சண்டை என்றும் காட்சிகள் விரிகிறது. பிறகு நயன்தாராவுடனான யஷ்ஷின் காட்சிகள் வரும்போது, ‘இந்த சிட்டியை நீதான் ஆள வேண்டும்’ என்று நயன்தாரா ஆசைப்படுகிறார். பிறகு எதிரிகளின் கையில் யஷ்ஷும், நயன்தாராவும் சிக்கிக்கொள்ள, அவர்களின் கடைசி ஆசை என்னவென்று வில்லன் கேட்கிறார். பிறகு ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோரின் காட்சிகள் இடம்பெறுகிறது.