×

பூஜையுடன் துவங்கிய ‘ட்ரெயின்’ பட ஷூட்டிங்!

 

மிஷ்கின்-விஜய்சேதுபதி கூட்டணியில் தயாராகவுள்ள  ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் ‘ட்ரெயின்’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குகிறார். கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து மிஸ்கின் நடிப்பிலிருந்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார். இந்த கூட்டணி முதல் முறையாக இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான  நிலையில் படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.