×

TRன் ஸ்பெஷல் பொங்கல் வாழ்த்து – அடுக்கு மொழியில் அடித்து  நொறுக்கியுள்ளார்.

 

தமிழர் பண்டிகையாம் பொங்கலை பலருமே சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டு ஒரு’ தலை ராகம்’  படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர் டி.ராஜேந்தர். இவர் இத்திரைப்படத்தில் எழுத்தாளராகவும், இசையமைப்பாளராகவும் அதோடு கௌரவ தோற்றத்தில் நடித்து, திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்திற்கு பின்னர் ‘வசந்த அழைப்புகள்’ என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் தனது  பயணத்தை தொடங்கினார்.திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பு, அந்த வகையில் பொங்கலை இன்னும் சிறப்பானதாக மாற்ற நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்திரன், தனக்கே உரிய அடுக்கு மொழி வசனத்தில் தாறுமாறான பாடலை பாடி, வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு  டி.ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார், தற்போது மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளதை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு தரமான பாடல் ஒன்றை டிரம்ஸ் வாசித்துக்கொண்டே பாடல் பாடியுள்ளார்.

பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றுள்ளது.  தொடர்ந்து வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.